தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகளுக்கு முக்கிய அறிவிப்பு

246 0

தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகள் இன்றைய தினத்திற்குள் அதனை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ள 17 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த பெயர் விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக பேராசிரியர் ஹரினி அமரசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, எமது மக்கள் சக்தி கட்சியும் இதுவரை தேசிய பட்டியலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்யவில்லை.

அந்த கட்சியினால் பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதன் காரணமாக அது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.