யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினர் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரம் காணிகளை மீளவும் மக்களிடம் கையளிக்க வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நேற்று பாராளுமன்றத்தில் 2017ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சு, காணி அமைச்சு ஆகியவற்றின் வரவுசெலவுத்திட்ட தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.
வலிகாமம் வடக்கில் எமது மக்களின் காணிகளை விடுவித்து ஆலயங்களில் எமது மக்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வதற்கு அரசு அனுமதிக்கவேண்டும் என்று கோருகின்றோமே அன்றி இனவாதம் பேசவில்லை எனவும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இரணைதீவு மக்கள் இரணைதீவுக்கு சென்று குடியேறக்கூடிய வழிவகைகளை மேற்கொள்ளுமாறும்; இதன்போது அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இராணுவம் பயன்படுத்துகின்ற பொதுமக்களின் துயிலுமில்ல காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.