19 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில தற்காலிக மாற்றங்கள் மட்டும் தற்போது செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்து உள்ளார்.
அமைச்சுப் பதவியினை ஏற்ற பின்னர் ஊடகங்களுக்கு நேற்று புதன்கிழமை கருத்து தெரிவித்த போது அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் இந்த நேரத்தில் இரத்துச் செய்யப்படாது என்றும் சில தற்காலிக மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும்.
அரசியல் அமைப்பில் ஒரு திருத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. தற்போது நாம் தற்காலிகமாக சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். புதிய குடியரசு அரசியல் அமைப்பைக் கொண்டிருப்பது நம்பிக்கை என்று நான் நினைக்கிறேன். இது தொடர்பாக நாம் யாரும் இதுவரை பேசவும் இல்லை. உடன்படிக்கைக்கு வரவும் இல்லை.
இந்த வாக்களிப்பு முறைமையை முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும் தொகுதி விகிதாசார முறைமையை ஏற்படுத்துவோம் என்றார்.