பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் இனி யாரும் கைது செய்யப்படமாட்டார்கள்-மனோ கணேசன்

346 0

mano-ganesanபயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இனிவரும் காலங்களில் கைதுகள் இடம்பெறாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

‘ஆவா குழு’ தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழிருந்து நீக்கப்பட்டு சாதாரண சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.