சிறிலங்காவில் வலுவான வெளிநாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே தனது இலக்காகும் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற சமய வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாட்டின் நற்பெயரை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, புதிய வர்த்தகக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (13) முற்பகல் வர்த்தக அமைச்சில் தமது கடமைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு உரையாற்றினார்.
நாட்டுக்கு பொருத்தமற்ற சட்டவிரோத வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்து, மக்களின் நலனுக்காக புதிய சட்டங்களும், பிரகடனங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.