வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!

276 0

வவுனியாவில்   இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதவாச்சிபகுதியிலிருந்து  இன்று காலை (வியாழக்கிழமை)வவுனியா நோக்கிவருகைதந்த முச்சக்கரவண்டி இரட்டைபெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்து மின்சாரதூணுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்து தொடர்பாக ஈரட்டை  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்