முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானம்

320 0

download-2முல்லைத்தீவு மாவட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகணசபையின் பிரதி அவைத்தலைவர் ஆகியோரும் இந்த சிரமதான பணிகளில் ஈடுபட்டதாக எமது செய்திளார் தெரிவித்தார்.

மாவீரர்துயிலும் இல்ல பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் பற்றைக்களை அகற்றி மாவீரர்களுடைய கல்லறைகள் இருந்த இடங்களை அடையாளப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் நேற்றைய தினம் முதல் சிரமதானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

download