செஞ்சோலை படுகொலை நினைவேந்தலுக்கு தடை – நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என காவல்துறை எச்சரிக்கை

325 0

செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ள காவல்துறையினர் மீறி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு காவல்துறையினரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

செஞ்சோலை படுகொலையின் 14 வருட நினைவுநாள் நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ள நிலையிலேயே காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

2006 ஆவணிமாதம் 14ம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலையை நினைவுகூறும் வகையில் வருடாவரும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையிலேயே ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.