பருத்தித்துறையில் விசமிகளால் கடலட்டை வாடி தீக்கிரை

245 0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பளை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் அண்மையில் தமது சொந்த இடமான சிலாவத்தை பகுதிக்கு தமது ஊர் தேவாலயம் ஒன்றின் திருநாளுக்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் செல்லமுன்னர், தமது தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக ஒருவரது வீட்டில் வைத்துவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த தீக்கிரையாக்கும் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.