கொரோனா தொற்று காரணமாக சிறிலங்காக்கு வருகை தர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் இன்று (12) சிறிலங்கா திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாரில் இருந்து வருகை தந்த 304 பேரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டாரில் இருந்து 15 பேர் வருகை தந்துள்ளதுடன் அவர்களில் 10 பேர் இலங்கையர்கள் எனவும் ஏனைய 5 பேரும் இத்தாலி மற்றும் பிரான்ஸ் தூதரகங்களில் கடமையாற்றுபவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இன்று காலை 5.30 மணியளவில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 289 பேரும் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.