சிறிலங்கா-மஹரகம, சமாதி மாவத்தையில் வீடொன்றின் முன்னாள் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் ஒன்றை அகற்ற முற்பட்ட ஒருவர் அதில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
தரணியாகல பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிலியந்தலவில் உள்ள தனியார் கட்டுமான துறை நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் குறித்த நபர் நேற்று காலை 7.30 மணியளவில் விபத்து இடம்பெற்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது நிறுவன உரிமையாளர் குறித்த கொங்கிரீட் தூணை நீக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் குறித்த தூணை இயந்திரத்தின் உதவியுடன் நீக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக குறித்த தூண் அவரின் மீது சரிந்துள்ளது.
இதன்போது அவர் பொக்கே இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்ட போதிலும் அவர் அச்சந்தர்ப்பதில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.