சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை சிறிலங்கா மிக சுறுசுறுப்பாகச் செயற்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால்கூட கொரோனா பரவுவதற்கான ஆபத்து அதிகளவில் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தனது அலுவலகத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அந்த பிரிவின் தலைவர் வைத்தியர் சுதாத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் பாடசாலை ஆரம்பித்தல் மற்றும் புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் நடமாற்றம் அதிகரித்தமையே இதற்கு காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சமூகத்தில் கொரோனா நோயாளி எவரும் அடையாளம் காணப்படாவிட்டாலும், கொரோனா தொற்று நோயாளி அல்லது நோய் தொற்று ஏற்பட்டால் அது பரவும் அபாயம் அதிகமாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் சுகாதார வழிகாட்டல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.