சிறிலங்காவில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

234 0

சிறிலங்காவில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்குள் தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு முன்பாக தங்களது சொத்துவிபரங்களை கையளிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத்தேர்தலில்  தோல்வியடைந்த வேட்பாளர்கள்  தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்  தொடர்பான விபரங்களை  ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன்  சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்  தொடர்பான விபரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.