வலஸ்முல்ல பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை தயாரித்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகன்கொட பகுதியில் புதன்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கல்கொலஹேன – மெதகன்கொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கிகள், தன்னியக்க துப்பாக்கி தோட்டாக்கள் , எஸ்.ஜே. ரக தோட்டாக்கள், வெற்றுத் தோட்டாக்கள் ,துப்பாக்கி தயாரிப்புக்கு பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பான மேலதிய விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.