திருகோணமலை தளத்தில் சித்திரவதைகள் இடம்பெறவில்லை என்கிறார் அதிகாரி வாக்குமூலம்

300 0

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சைட் என்ற இடம் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டது சித்திரவதைகளுக்கு அந்த பகுதியை பயன்படுத்தவில்லை என அந்த முகாமின் தளபதி சுமித் ரணசிங்க தெரிவித்துள்ளார்

திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள கன்சட் பகுதியை நல்லாட்சி அரசாங்கத்தில் கோத்தா முகாம் என அழைத்தனர் என சுமித் ரணசிங்க அரசியல் பழிவாங்கல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் 700 விடுதலைப்புலிகள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர் என நல்லாட்சி அரசாங்கத்தில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் என்பவரே முதலில் ஊடகங்களில் கோத்தபாய முகாம் என்பதை பயன்படுத்தினார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிஐடியின் முன்னாள் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா என்பவரும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பி அறிக்கையில் கோத்தா முகாம் என குறிப்பிட்டிருந்தார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிஐடியின் முன்னாள் அதிகாரி சானி அபயசேகரவும் கோத்தபாய முகாம் என்றே அழைத்தார் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.