தமிழர் இனப்படுகொலைக் கல்வி வாரத்தை அங்கீகரியுங்கள்; ஒன்றாரியோ முதல்வரிடம் பிரதான எதிர்க் கட்சி கோரிக்கை

365 0

கனடாவில் மிகப் பெரிய மாகாணம் என்ற பெருமைக்குரியதும் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமுமாகிய ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, (என்டிபி) ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை கல்வி வாரத்தை ஒன்றாரியோ மாகாண நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்குமாறு ஒன்றாரியோ முதல்வரை வேண்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களுக்கு , ஸ்காபுறோ தென்மேற்கு தொகுதியின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான என்டிபி கட்சியைச் சேர்ந்த Scarborough Southwest, Doly Begum and NDP MPP for Brampton East, Gurratan Singh ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த விடயம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடிதத்தில், சட்டமூலம் 104 என்ற இலக்கமுடைய இந்த மசோதாவானது இலங்கையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் கொடுமைகளை ஒன்றாரியோ பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் நோக்கோடு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற தமிழ் பேசும் உறுப்பினரான விஜய் தணிகாசகலம் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை.

எனவே மேற்படி மசோதா 104 ஐ உடனயாக ஒன்றாரியோ மாகாண நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வாக்கெடுப்பிற்கு விடும்படியும். அதற்கு தங்கள் கட்சி, முழுமையான ஆதரவைத் தரும் என்று மேற்படி எம்பிபிக்களான Scarborough Southwest, Doly Begum and NDP MPP for Brampton East, Gurratan Singh ஆகியோர் ஒன்றாரியோ முதல்வருக்கு எழுதியுள்ளனர்.