பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன் இந்தி படிக்கவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது:-
இந்தியரா என்று தம்மிடம் கேள்வி கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் நான் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்ததாகவும், இந்தி தெரியாது என்றும் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொன்னது அவமானம் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்று கூறிய பாஜக நிர்வாகி வி.பி. துரைசாமிக்கு பதில் அளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் என்று கூறியுள்ளார்.
தமக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பது விஷயம் கிடையாது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.