முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நபர் ஒருவர் இடியன் துவக்கால் தனக்குத்தானே வெடி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாங்குளம், துணுக்காய் வீதியை சேர்ந்த இரகுநாதன் கௌரிதரன் (37-வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் கால் முறிந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் (11) வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் இடியன் எனப்படும் ஒருவகை கட்டு துப்பாக்கியினால் தனக்குத்தானே வெடி வைத்து மரணித்துள்ளார்.
மரணம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணையில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் விரக்தியுற்ற குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.