மன்னாரில் விபத்து-இருவர் காயம் (படங்கள்)

314 0

1மன்னார் பிரதான பாலத்தில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த தனியார், மற்றும் அரச பேரூந்துகள், மன்னார் பிரதான பாலத்தில் போட்டி போட்டு ஓடியதால் பாரிய விபத்து ஏற்பட்டது.

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தின் போது பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இரண்டு பேரூந்துகளும் சில மணி நேரங்களில் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு போட்டி போட்டு மன்னாரை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், பின்னால் வந்த அரச பேரூந்து, முன்னால் சென்ற தனியார் பேரூந்தை முந்திச்செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ்ஸில் 7 பயணிகள், யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துள்ளனர்.

மன்னார் பிரதான பாலத்தில் அரச மற்றும் தனியார் பஸ்கள், ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட போது தனியார் பேரூந்து பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.

இதில், தனியார் பேரூந்தில் பயணித்த பயணி ஒருவரும் நடத்துனரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் பேரூந்துகளுக்கிடையில் போட்டி ஏற்பட்டு வருகின்றமையால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

3