2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அபடோபாத்தில் அல்குவைதா தலைவர் ஒஸாமா பின் லேடனைக் கொலை செய்யும் திட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க கடற்படைபடையின் சீல் படைபிரிவுக்கு ஒபாமா நிர்வாகத்தால் புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பயங்கரவாதிகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்து அவர்களைப் சுற்றிவளைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதே அந்தப் பொறுப்பாகும்.
சிரியா அல்லது ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் இராணுவ செயற்பாடுகளுக்கு அப்பாற் செல்லும் வகையில், இந்தப் படையினருக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கூட்டிணைந்த விசேட கட்டளையிடும் பிரிவாக பெயரிடப்பட்டுள்ள அவர்களின் புதிய திட்டத்துக்கு மேற்குலக நாடுகளுக்கு விடுக்கப்படும் ஐ.எஸ். தாக்குதல் அச்சுறுத்தல்கள் குறித்து ஆராயும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.