மூளைச் சாவடைந்தவர்களின் சிறுநீரகங்களை பயன்படுத்த திட்டம்

289 0
Bleeding man lying on the street after car accident
திடீர் விபத்துக்கள் மூலம், மூளைச் சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களை, சிறுநீரக நோயாளர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடியும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் வருடாந்தம் விபத்துக்கள் மூலம் 700 இற்கும் 800 இடைப்பட்ட பொதுமக்கள் மரணிக்கின்றனர்.

இவ்வாறான மரணங்கள்மூலம் ஆரோக்கியமான சிறுநீரகம்போன்ற உடற்பாகங்கள் பயனின்றி அழிவடைகின்றது.

இந்த நிலையில் பயனின்றி அழிவடைகின்ற சிறுநீரகங்களை உறவினர்களின் அனுமதியுடன் சிறுநீரக நோயாளர்களுக்கு பொருத்தும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் வருடாந்தம் 5000 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்படுவதாக சிறுநீரக அறுவை சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கண் மற்றும் சிறுநீரகங்களை தானமாக வழங்குகின்றவர்கள் 0112 422 335, 0112 422 336 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன்மூலம் இது தொடர்பான மேலதிக விவாரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.