வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் இரண்டாம் கட்டத்தின் ஒருபகுதியாக 222 இலங்கையர்கள் சிறிலங்கா வந்தடைந்துள்ளனர்.
அதாவது மூன்று நாடுகளில் இருந்த இலங்கையர்களே நான்கு விசேட விமானங்களில் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர்.
கட்டார் ஏர்லைன்ஸ் விமானம் கியூ.ஆர் -668 விமானத்தில், கட்டார்- தோஹாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை)அதிகாலை 1.23 மணியளவில் 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
மேலும், ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு சொந்தமான ஏர்லைன்ஸ் விமானம் யு.எல்-1506 விமானத்தின் ஊடாக இலங்கையர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யு.எல் -1102 விமானத்தில் ஊடாக 178 இலங்கையர்கள் மாலைத்தீவிலுள்ள மால் விமான நிலையத்திலிருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.