அடுத்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பொருட்டு கட்சியை முழுமையாக மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
2020 பொதுத் தேர்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விடயங்கள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடியுள்ளார்.
அந்தவகையில் கட்சி உறுப்பினர்களுக்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவும், கட்சியை முன்னோக்கி நகர்த்த ஒரு புதிய தலைமைக் குழுவை அடையாளம் காணவும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அடுத்த செயற்குழு கூட்டத்தில் தங்கள் முடிவை சமர்ப்பிக்குமாறும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.