களனி கங்கை நீர் பாரியளவில் மாசடையும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
சபையின் ஆய்வுகூட பொது முகாமையாளர் எச்.ஏ.கே.அமரகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்காலத்தில் நீர் விநியோகப் பணிகளில் தடை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களனி ஆற்றுக்கு அருகாமையில் மிட்டியாவத்தை பகுதியில் 4000 இற்கும் மேற்பட்ட கைத்தொழிற்சாலைகள் காணப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனிதர்களின் தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.