ஹம்பாந்தோட்டை- மிரிஜ்ஜவல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்று, கூகுள் வரைப்படம் ஊடாக பார்க்கும் போது, CHINA SW என தெரிவது தொடர்பில், இலங்கையிலுள்ள சீனத் தூதரக அலுவலகம் விளக்கமொன்றை அளித்துள்ளது.
குறித்த கட்டடம் ஹம்பாந்தோட்டை துறைமுக பணிகளின் போது, CHEC என்ற நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டதாகவும் இதன்போது, CHINA SLK என்றே குறித்த கட்டடம் அமைக்கப்பட்டிருந்ததாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எனினும் அதன்பின்னர், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்கும் பணிகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிறுவனம் (HIPG) , ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவை நிறுவனம் ( HIPS) ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகள் வேகமாக அபிவிருத்தியடைந்து வருவதால், அக்கட்டடத்தை விரிவாக்கும் பணிகள் முன்னெடுக்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அது அபிவிருத்தியின் காதல் கதை என்றும் இலங்கையிலுள்ள சீனத் தூதரக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.