இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.
இந்தியாவில் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஆகஸ்டு 5-ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவின்போது நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோவில் பூமி பூஜை படங்கள் 3டியில் காட்சிப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.