சென்னையில் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளும் தெற்கு ரெயில்வே

256 0

சென்னையில் இன்று, நாளை 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி தெற்கு ரெயில்வே சோதனை மேற்கொள்கிறது.தெற்கு ரெயில்வே கூறியிருப்பதாவது:

சென்னையில் இன்றும், நாளையும் 143 கி.மீ. வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா, சென்னை-கூடூர் மார்க்கங்களில் அதிவேகமாக ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

ரெயில்கள் 143 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளதால் தண்டவாளத்தை யாரும் கடக்க வேண்டாம்.

சோதனை ஓட்டத்தில் தண்டவாள பாதைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.