முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரை சிவனேசதுரை சந்திரகாந்தனை அமைச்சர் பதவியை ஏற்குமாறும் நாளை பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் பிள்ளையானிற்கு என்ன பதவி வழங்கப்படும் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனவும் டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.
பிள்ளையான் சிறையிலிருந்தபடி பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாளை பதவியேற்பு நிகழ்வில் பிள்ளையான் கலந்துகொள்வதற்கான நீதித்துறையின் அனுமதியை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.