ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அதிவிசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் காமினி லக்ஸ்மன் பீரிஸ், சாகர காரியவசம், அஜிட் நிவிட்கப்ரல், மொஹமட் அலி சப்ரி, ஜயந்த வீரசிங்க, மஞ்சுள விஜயகோன் திஸாநாயக்க, ரஞ்சித் பண்டார, கவிந்த குமாரதுங்க, மொஹமட் முஸம்மில், திஸ்ஸவிதாரண, யாத்தமணி குணவர்தன, சுரேன் ராகவன், சீதா அரேம்பிய பொல, ஜயந்த பெரோனா, மொஹமட் பசில் மார்ஜான் அஸ்மின், ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக செல்வராசா கஜேந்திரன் தேசிய பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஏற்கென அறிவிக்கப்பட்டதன்படி தவராசா கலையரசனின் பெயர் தேசிய பட்டியலில் இணைக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று இரவு அதற்கான விசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.