அக்கரைபற்றில் டிரக்டர் கவிழ்ந்ததில் சிறுமி பலி

260 0

அக்கரைபற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆளங்குளம் வீதியில் இடம்பெற்ற டிரக்டர் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (10) மாலை 5.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிரக்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் டிரக்டர் ஓட்டுனர் மற்றும் அதில் பயணித்த சிறுமிகள் இருவர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அக்கரைபற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.