இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை சிவஞானம் சிறிதரனுக்குக் கொடுத்தால் அதனை தான் ஆதரிப்பதாக அறிவித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
பொதுத்தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனக சபாபதியும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனும் யாழ்ப்பாணத்தில் வீடு வீடாகச் சென்று தனக்கெதிராகப் பரப்புரை செய்தார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆஸ்திரேலிய, எஸ்.பி.எஸ். தமிழ் செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருககின்றார்.