பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளமும் சலுகைகளும்

617 0

இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய பாராளுமன்றம் இம்மாதம்12 ஆம் திகதி கூடவுள்ளது.

கண்டி திருமண மண்டபத்தில் அமைச்சரவை பதவி யேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது. இதில் 26 அமைச்சர் கள் உள்ளடக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி, வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சராக தினேஷ் குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமல் ராஜபக்ஷ நீர்ப்பாசன அமைச்சராகவும், நாமல் ராஜ பக்ஷ விளையாட்டு துறை அமைச்சராகவும் நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியராச்சி , விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நீதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படுவார் என்றும், நாலக கொடஹேவா, சரத் வீரசேகர, ஜீவன் தொண்டமான் ஆகியோர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளமும் சலுகைகளும்

அடிப்படைச் சம்பளம் 54,285/=

அலுவலகக் கொடுப்பனவு 100,000/=

நிலையான தொலைபேசி 50,000/=

கைத்தொலைபேசி 50,000/=

முத்திரை 14,000/=

பெற்றோல் 350 லீற்றர் 41,890/=

வீட்டு வாடகை 50,000/=

வாகனக் கொடுப்பனவு (மாதாந்தம்) 600,000/= 5 வருடத்திற்கு 36 மில்லியன்)

ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/= (சுமாராக மாதம் 8 கூட்டம் )

அமர்வு இல்லாத தினங்களில் குழு நடைபெறும்போது ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் சமுகமளிப்பதற்காக ரூ. 2,500/= (சுமாராக மாதத்தில் 5 கூட்டம் )

வாகன சாரதி 45,000/=

அலுவலக பணியாளர்கள் – 04

அலுவலக பணியாளர் போக்குவரத்து செலவு மாதாந்தம் ரூ. 10,000/=

பிரத்தியேக செயலாளர் 40,000/=

ஒருங்கிணைப்பு செயலாளர் 40,000/=

பிரத்தியோக செயலாளருக்கு எரிபொருள் 218 லீற்றர் – 17440/=

உபசார கொடுப்பனவு 1000/=

இவற்றை விட பாராளுமன்ற அமர்வின் போது 400 ரூபா பெறுமதியான உணவு ரூபா 12.50 இற்கு வழங்கப்படுகிறது.
பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் உயர் கல்வி வாய்ப்பு

VIP வரிசை வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள்

5 வருடம் பதவியில் இருந்தால் நிரந்தர ஓய்வூதியக் கொடுப்பனவாக மாதம் 50,000/= வழங்கப்படுகிறது.

குறிப்பு – வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள், கம்பரெலிய, சுப்ரிகம போன்ற விசேட திட்டங்களின் கமிசன், வாக்கெடுப்பு சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் பெட்டிகள் என்பன இவற்றுள் உள்ளடங்காது.