ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கேள்வி – தேர்தலில் உங்களது வெற்றி குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில் – கடந்த 2010 பொது தேர்தலில் எமது அமைப்புக்கு 6700 வாக்குகள் கிடைத்தன. இதன் பின்னர் 2015 இல் நடை பெற்ற தேர்தலில் எமக்கு 20இ000 வாக்குகள் கிடைத்தன.
அந்த வகையில் இத்தேர்தலில் 3 ½ மடங்கு வளர்ச்சியை காட்டக்கூடிய அமைப்பாக நாம் இருக்கின்றோம். இத்தேர்தலில் நாம் கூடுதலான எதிர்பார்ப்பு வைத்திருந்தாலும் கூட முடிவுகள் ஆரோகன வளர்ச்சியை காட்டியுள்ளது.
ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழருக்கு கடும் கவலையை கொண்டு வரப் போகின்றது என்பதை நாங்கள் மறைக்க முடியாது.
கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம்.எனவே வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும்.
கேள்வி – உங்களுக்கு கிடைத்த தேசிய பட்டியலுக்கு யாரை நியமிக்கப் போகின்றீர்கள்?
பதில் -எமது இயக்கத்தினுடைய மத்திய குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கூடி தேசியப் பட்டியலை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்தது. இதன் போது ஏகமனதாக கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தது.
கட்சியின் செயலாளர் என்ற வகையில் அவர் கடந்த 10 வருடங்களாக எங்களுடைய கட்டமைப்பை வடக்குஇ கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பலப்படுத்துவதற்கு அயராது பங்களிப்பை ஆற்றியிருந்தார். அந்த வகையில் எமக்கு கிடைத்த தேசியப் பட்டியலை அவருக்கு வழங்குவதன் மூலம் எமது அமைப்பை இது வரைக்கும் இல்லாத அளவுக்கு பல மடங்காக பலப்படுத்த இந்த பதவி உதவும் என்ற அடிப்படையில் அவருடைய பெயர் விசேடமாக எங்களுடைய கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை இ மட்டக்களப்பு மற்றும் திருமலை மத்திய குழு உறுப்பினர்களாலும் வன்னி மத்திய குழு உறுப்பினராலும் ஆமோதித்து உறுதிப்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் அவருடைய நியமனம் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும்இ அமைப்பின் தலைவர் என்ற வகையில் நான் செய்யும் கடமைகளுக்கு மிகவும் பலமான செயற்பாடாக அமையும் என்பதாலும் அவருடைய நியமனத்திலும் நான் மிகவும் ஆறுதல் அடைகின்றேன்.
கேள்வி – 2/3 பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் உங்கள் செயற்பாடு எதிர்காலத்தில் எவ்வாறு அமையும்?
பதில்- பாராளுமன்றத்துக்குள்ளே மிக மோசமான இனவாத கொள்கை கொண்ட தரப்பு இந்தளவு ஆதரவுடன் வந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் நியாயம் பேசி விடயங்களை கையாள்வது என்பது சாத்தியம் அற்ற விடயம்.
அதனால் தான் நாங்கள் 2/3 பெரும்பான்மை பெற்ற தரப்பை எமது பக்கம் திரும்பி பார்க்க வைக்க வேண்டியதொரு நிர்ப்பந்தத்துக்கு தள்ள வேண்டும்.
அதை செய்யக்கூடிய வழிகளை நாங்கள் தீவிரமாக கையாளுவோம்.
முக்கியமாக தீவுக்கு வெளியிலேயே தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
தீவுக்குள்ளே தமிழ் மக்களை அணி திரட்டி ஒரு முமுமையான மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்கள் பலத்தை தவிர்க்க முடியாத ஒரு அணி திரட்டலை நாங்கள் செய்ய வேண்டும்.
இவை தான் எமக்கு இருக்க கூடிய எங்களுடைய இலக்கை அடைவதற்கான அணுகுமுறையாக இருக்கும்.
கேள்வி – வடக்கில் ஆசனங்கள் சிதறுண்டு இருப்பது குறித்து .
பதில் – கடந்த 10 வருடங்களாக வடக்கில் கண்ணை மூடி ஒரு தரப்புக்கு வாக்களித்தனர். தெற்கில் இருக்க கூடிய ஒரு அமைப்புக்கான ஒரு தலைப்பட்ச அணி திரட்டல் கடந்த 10 வருடமாக தமிழ் தரப்பில் இருந்தது.
அந்த 10 வருட அரசியல் மக்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்ததால் ஒரு மாற்றத்தை நோக்கி மக்கள் நகர தொடங்கியுள்ளனர்.
தமது மாற்று யார் என்பதை மக்கள் தீர்மானித்து அணி திரள முன்னர் தேர்தல் வந்தமையால் தெரிவுக்கான தெளிவில்லாமல் வாக்குகள் பிரிந்து போயின. இது ஒரு பின்னடைவு தான். அடுத்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் தமிழ்தேசிய மக்கள் முன்னணிதான் எமது தெரிவு என்று அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கின்ற நியாயங்களை மக்கள் முன்கொண்டு போய் நாம் சேர்க்கவுள்ளோம்.
கேள்வி – அடுத்த 5 வருட காலத்துக்கு எவ்வாறு செயற்பட போகின்றீர்கள்?
பதில் – எமது செயற்பாடு மூன்று கோணத்தில் அமையும். முதலாவதாக கோதபாய ராஜபக்ஷ கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மக்களை கொண்டு அமைய எதிர்ப்பதற்கு உரிய தெளிவூட்டலை செய்யும் அதே சமயம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைஇ நாட்டை பிரிக்காமல் தமிழ் மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்புக்கான யோசனைகளை அடைவதற்கான உரிய அழுத்தம் கொடுக்க செயற்படுவோம்.
இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைத்த இன படுகொலைகளுக்கு ஸ்ரீலங்கா அரசை பொறுப்பு கூற வைக்கக்கூடிய ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஒன்றை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மிக கடுமையாக உழைப்போம்.
மூன்றாவதாக தமிழ் தேசத்தின் பொருளாதாரத்தையும் ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பொருளாதாரத்தின் பலத்தையும் நாட்டில் இருக்கக்கூடிய ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழ்மக்களின் பங்களிப்போடு அடைவதற்கு நம்பிக்கையுடன் பயணிப்போம்.
அதாவது புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் முதலீடுகளை தமிழ் தேசத்தில் கொண்டு வந்து சிறிய நடுத்தர தொழில்துறையை உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவுள்ளோம்.
இதன் ஊடாக தாயகத்திலுள்ள வேலை வாய்ப்பை உருவாக்குதல்இ தமிழ் குடும்பங்கள் ஒவ்வொன்றினதும் வருமானத்தை அதிகரித்து பொருளாதார ரீதியில் பலப்படுத்தல் போன்றன ஏற்படும். இதன் பிரகாரம் புலம்பெயர் தமிழ் மக்கள் முதலீடு செய்கின்ற தொழில்துறை ஊடாக அவர்களுக்கு லாபமும் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தமிழ் குடும்பங்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையிலும் நாம் திட்டங்களை நாங்கள் வகுத்து கொடுக்கவுள்ளோம்.
ரொஷான் நாகலிங்கம்