கியூப நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ரே (Fidel Castro) தமது 90வது வயதில் காலமானார்.
இந்த நாட்டு அரச தொலைக்காட்சி இதனை அறிவித்துள்ளது.
பிடல் காஸ்ட்ரோ 1926ஆம் ஆண்டு தென்கிழக்கு Oriente மாகாணத்தில் பிறந்தார்.
இவர் பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியுமான திகழ்ந்தார்.
1956ஆம் ஆண்டு சேகுவராவுடன் (Che Guevara) இணைந்து, அரசாங்கத்திற்கு எதிராக கெரில்லா தாக்குதலில் ஈடுப்பட்டார்.
கியூபாவில் 1959இல் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
1959ஆம் ஆண்டு முதல் முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார்.
2008ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய அவர், அந்த பதவியை தமது சகோதரனான ராகுல் கெஸ்ரேவிடம் ஒப்படைந்தார்.
49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தி பிடல் கொஸ்ட்ரோ 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி பதவியிலிருந்து விலகினார்.
உலகத்தில் நீண்ட காலம் தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் என்ற பெருமை பிடல் காஸ்ட்ரோவையே சாரும்.
இதனிடையே, பிடல் காஸ்ட்ரோ 1979ஆம் ஆண்டு தொடக்கம் 1983ஆம் ஆண்டு வரையிலும், மற்றும் 2006 தொடக்கம் 2008 ஆண்டு வரையிலும், அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக கடமை புரிந்துள்ளார்.
அமெரிக்காவிற்கு மிக அண்மைய நாடாக கியூபா இருந்த போதிலும், கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை பிடல் காஸ்ரேவையே சாரும்.