சிறிலங்கா -மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

305 0

சிறிலங்கா-மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனால் டெவன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்துள்ளது.

எனவே கரையோர பகுதியில் உள்ளவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா ஹட்டன், கொழும்பு உள்ளிட்ட பிரதான வீதிகளில் பணி மூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.