சிறிலங்காவில் புகையிரத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

251 0
சிறிலங்காவில் வெலிகம, பெலேன பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09) மாலை 4.20 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெலிஅத்தயில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.