முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உடல் நிலை தொடர்பாக கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையொன்றை கோருவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக வௌிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குமாறு பசில் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.