குறித்த தேசிய பட்டியல் கிடைக்கப்பெற்ற பின்னர் இம்முறை பொதுத் தேர்தலின் தேசிய பட்டியலை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பெயர் விபரங்கள் நேற்று (07) பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் விபரத்தை விரைவில் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த பெயர் பட்டியலை ஆணைக்குழுவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற தேசிய மக்கள் சக்தி, அபே ஜன பல கட்சி ஆகியவற்றின் தேசிய பட்டியல் குறித்து அத தெரண வினவியிருந்த நிலையில் அது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் தெரிவித்திந்தனர்.