தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு கீழ் இன்று (08) காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜிற்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி சசிகலாவின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (07) முதல் ரவிராஜின் சிலையில் முகத்துக்கு கறுப்பு துணி போர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.