இருப்பை காப்பாற்ற அம்பாறைக்கு கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வேண்டும்!

272 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருப்பையும் மக்களின் இருப்பையும் – காணிகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் அம்பாறைக்கு தேசிய பட்டியலை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

“வட, கிழக்கில் அம்பாறை மாவட்டம் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது. கடந்தகாலங்களில் பலவிதமான புறக்கணிப்புகளுக்கும் பாரபட்சங்களுக்கும் உட்பட்ட 52 தமிழ்க் கிராமங்களைக் கொண்ட அம்பாறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அவசியம் வழங்கப்பட வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் ஆசனம் இல்லாமைக்கு தேசிய கட்சியின் கைக்கூலிகள் காரணமாக இருக்கலாம். ஆனாலும் அம்பாறை உட்பட கிழக்கில் பின்னடவை சந்திக்க பிரதான காரணம் கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வு நடக்காமையே.

பிரதேச செயலகம் பெற்றுத் தராதவர்கள் சமஷ்டி தீர்வு பெற்று தருவார்களா? எனும் பிரச்சினை நிலவுகின்றது. எனவே, கட்சியின் இருப்பையும் மக்களின் இருப்பையும் – காணிகளின் இருப்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் அம்பாறைக்கு தேசிய பட்டியல் அவசியமாகிறது” – என்றார்.