ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி செல்ல தீர்மானித்துள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாகமகே தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, நேற்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று சிறிகொத்தவில் இடம்பெற்றது.
இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைத்து முன்னோக்கி செல்ல தீர்மானித்துள்ளோம். இந்தத் தேர்தலில் நாம் பாரிய தோல்வியை சந்தித்துள்ளோம்.
ஜனாதிபதியிடமே அரசாங்கம் இருக்க வேண்டும் என மக்கள் நினைத்துள்ளதால் கூட இந்த தோல்வி எமக்குக் கிடைத்திருக்கலாம்.
இன்னொரு பக்கத்தில் எமது கட்சியின் பிளவையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். சஜித் பிரேமதாஸ எமது கட்சியிலிருந்து பிரிந்து சென்று, எமது கட்சியை அழித்ததோடு, அவர் சார்ந்த கட்சியையும் அழித்துள்ளார்.
இவை தான் தோல்விக்குக் காரணம் என நாம் நினைக்கிறோம்“ எனத் தெரிவித்துள்ளார்.