இன்று சிறிகொத்த என்பது வெறும் கட்டடமாக மாறிவிட்டது – ரஞ்சித் மத்துமபண்டார

262 0

இன்று சிறிகொத்த என்பது வெறும் கட்டடமாக மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இன்று சிறிகொத்த என்பது வெறும் கட்டடமாக மாறிவிட்டது. இந்த வெற்றுக் கட்டடத்தை கைப்பற்ற வேண்டிய தேவை எமக்குக் கிடையாது.

சிறிகொத்தவுக்கு ஆதரவளித்த பெரும்பான்மையான உறுப்பினர்களும், மக்களும் இன்று எம்முடன் தான் இருக்கிறார்கள்.

இதற்கான தீர்மானத்தையும் மக்கள் இன்று வெளியிட்டுள்ளார்கள். நாம் எந்தத் தரப்புடனும் தனிப்பட்ட ரீதியாக கோபம் கொள்ளவில்லை.

மக்கள் வழங்கிய ஆணைக்கு இணங்கவே செயற்பட்டு வருகிறோம். ரணில் விக்கிரமவின் செயற்பாடுகளின் பலனாகவே, மக்கள் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்கள்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.