உலக செஸ் போட்டி: 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி

302 0

201611260738273384_world-chess-olympiad-the-10th-round-to-win-magnus-carlsen_secvpfஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் உலக செஸ் போட்டியின் 10-வது சுற்றில் கார்ல்சென் வெற்றி பெற்றுள்ளார்.மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இது 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் 7 சுற்று வரை எல்லா ஆட்டமும் டிராவில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின், கார்ல்சென்னை வீழ்த்தி அதிர்ச்சி அளித்து முன்னிலை பெற்றார்.

9-வது சுற்று ஆட்டம் டிராவாக அமைந்தது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த 10-வது சுற்று ஆட்டம் சுமார் 7 மணி நேரம் நீடித்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 75-வது காய் நகர்த்தலில் செர்ஜி கர்ஜாகினை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் கார்ல்சென் 5-5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டினார். இதனால் போட்டியில் மேலும் சூடுபிடித்து இருக்கிறது.