எகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 8 பேர் பலி

319 0

201611260536097308_8-soldiers-killed-in-terror-attack-in-egypt_secvpfஎகிப்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியாயினர்.எகிப்து நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு அதிபர் முகமது மோர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு சினாய் தீபகற்ப பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு வடக்கு சினாய் தீபகற்பபகுதியில் ஒரு சோதனை சாவடி மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியானதாகவும், இந்த தாக்குதலின்போது பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்பது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கார் குண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 8 பேர் பலியாகினர்” என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாதுகாப்பு படை வட்டாரங்கள் இதுபற்றி தெரிவிக்கையில், அல் ஆரிஷ் நகரில் உள்ள சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசியதாகவும், முகமூடி அணிந்த நபர்கள் 3 வாகனங்களில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறின.