தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் தோல்வியடைந்திருப்பதாக செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாலை வரையில் குழப்பமான நிலை காணப்பட்ட போதிலும், மாவை தோல்வியடைந்திருப்பதை செயலக வட்டாரங்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்தன.
கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவானதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், அவர்கள் யார் என்பது இன்று அதிகாலை உரை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.
எஸ்.சிறீதரன் வெற்றிபெற்றிருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. அவரைவிட த.சித்தார்த்தன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. சித்தார்த்தன் மூன்றாவது இடத்தில் இருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர் நான்காது இடத்தில் இருப்பதாக பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அவர் நான்காவது இடத்துக்கு வந்தது எப்படி என? யாழ் மத்திய கல்லூரிக்கு முன்பாக குவிந்திருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கும் நிலையில் அதிகாலை வரையில் உத்தியோகபூர்வமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.