நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இதனைவிட, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒவ்வொரு ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளது.