இதுவரை 75 வீதமான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரனமுன மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையை்ப பெற்று அமோக வெற்றியடைந்துள்ளது.
அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 125 ஆசனங்களை இதுவரையில் கைப்பற்றியுள்ள நிலையில் ஐக்கிய மக்க்ள சக்தி 45 ஆசனங்களை மட்டுமோ இதுவரை பெற்றுள்ளது.
அத்தோடு கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 106 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எந்த தொகுதிகளிலும் வெற்றிபெறாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதேவேளை, இல்ஙகை தமிழரசுக் கட்சி 10 ஆசனங்களை இதுவரை கைப்பற்றியுள்ளதுடன், ஏனைய கட்சிகள் 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், இன்னும் 39 ஆசனங்களுக்கான முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மேலும் ஆசனங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.