மெக்சிக்கோவில் சட்டவிரோத போதை பொருள் விநியோகம் அதிக அளவில் இடம்பெறும் பிரதேசத்தில் பாரிய மனித புதை குழியொன்றை மெக்சிக்கோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனித புதை குழி அகழப்பட்ட போது, 32 உடலங்களும் 9 மனித தலைகளும் மீட்கப்பட்டுள்ளன.
மலைப்பாங்கான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதை குழியில் இருந்து 31 ஆண் உடலங்களும் ஒரு பெண் உடலமும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த பிராந்தியத்தில் போதை வஸ்து விநியோகத்தில் இடுபட்டு வரும் குழுக்களுக்கு இடையே அடிக்கடி பாரிய மோதல்கள் இடம்பெறுவது வழமையான விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதைகுழிகள் ஏதாவது உள்ளதா என அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியினில் ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்ட கொலைகள் மெக்சிக்கோவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட உடல் எச்சங்கள் நிபுணத்துவம் வாய்ந்த பரிசோதனைகளுக்காக தலைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.