வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பாக எந்தவித சிக்கலும் இல்லை – ஸ்ரீலங்கா பொலிஸ்

282 0

வாக்கு எண்ணும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக எந்தவித சிக்கல்களும் இல்லை என ஸ்ரீலங்கா பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் வாக்கெண்ணும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கிடைக்கப்பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 362 ஆக பொலிஸ் ஊடாகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த தேர்தல் காலப்பகுதியில் குற்றச் செயல்கள் தொடர்பாக 104 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் விதி மீறல் தொடர்பில் 314 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய மொத்தமாக 418 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.