ஸ்ரீலங்காவில் இதுவரை 166737 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) மாத்திரம் 880 பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 291 ஆக பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 68பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சுகாதரா அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.